Take a fresh look at your lifestyle.

கல்வியே ஆயுதம்: சூர்யா பேச்சு

148

கல்வியே ஆயுதம்: சூர்யா பேச்சு
சூர்யாவின் ‘அகரம் பவுண்டேஷன்’ 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார், தம்பி கார்த்திக், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றி மாறன், இயக்குநர் ஞானவேல் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசுகையில், கல்வியே ஆயுதம்.. இதுதான் அகரத்தின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நனவாகி இருக்கிறது. கல்வி என்பது படிப்பு மட்டுமல்லாமல் பண்பைச் சொல்லிக் கொடுப்பதும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதும் தான். அதனை இன்று மடங்கு மாணவர்கள், மாணவிகள் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றார்.