விலங்குகள் பாதுகாப்பை பற்றி சொல்லும் படம் மிஸ்டர் ஜூகீப்பர்
இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் இயக்கத்தில் ‘குக்கு வித் கோமாளி’ புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் மிஸ்டர் ஜூகீப்பர். பல்வேறு தடங்கலுக்கு பிறகு இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஷிரின் காஞ்ச்வாலா, சிங்கம்புலி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த புகழ், வேலை தேடி பிலிப்பைன்ஸ் செல்கிறார். அங்கே ஒரு கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், ஒரு பெரிய மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்து, அங்கே உள்ள ஒரு புலியுடன் மாட்டிக்கொள்கிறார். அந்த புலியுடன் ஏற்படும் அவரது நட்பு, விலங்குகளை வேட்டையாடும் சர்வதேச கும்பலை அவர் எப்படி எதிர்கொள்கிறார், விலங்குகள் பாதுகாப்பின் அவசியத்தை எப்படி உணர்த்துகிறார் என்பதை இதில் எமோஷனுடன் இயக்குனர் சொல்லி உள்ளார்.
Prev Post
Next Post