கிளைமாக்ஸ் மாற்றம்: தனுஷ் கடும் எதிர்ப்பு
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் தனுஷ் அறிமுகமான படம் ராஞ்சனா. இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. தற்போது இந்த படம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றம் செய்யப்பட்டு கடந்த 1-ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் இதில் கிளைமாக்ஸ் காட்சி மாற்றப்பட்டது குறித்து ஏற்கனவே படத்தின் இயக்குனர் ஆனந்த்
எல்.ராய் தனது அதிருப்தியை வெளிப் படுத்தி இருந்தார். இந்நிலையில் தனுஷ் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஏ.ஐ. மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி படத்தின் அசல் உணர்வையும் ஆன்மாவையும் மொத்தமாக சிதைத்து விட்டது. எனது எதிர்ப்பையும் மீறி தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
