Take a fresh look at your lifestyle.

கந்தன் மலை படத்தின் மூலம் நடிகரான எச் ராஜா

113

கந்தன் மலை படத்தின் மூலம் நடிகரான எச் ராஜா
அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் எச்.ராஜா .தனது அதிரடி பேச்சால் அடிக்கடி அரசியலில் புயலை கிளப்பி வரும் அவர் அரசியலில் இருந்து தற்போது சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் சமீபத்தில் நடந்த பிரச்சினைகளை மையமாக
கொண்டு உருவாகும் ‘கந்தன் மலை’ என்ற படத்தில் திருப்பரங்குன்றம் ஊர் தலைவராக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எச்.ராஜா நடிக்கிறார். இந்த படத்தை கிடுகு படத்தை இயக்கிய வீர முருகன் இயக்குகிறார். தாமரை டி.வி. நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. 1 மணி நேரம் ஓடக் கூடிய இந்த படம் யூடியூப்பில் வெளியாக இருக்கிறது. இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. இதன் முதல் தோற்றம் தற்போது வெளியாகி உள்ளது.