Take a fresh look at your lifestyle.

லோகேஷ் பிறந்தநாள்: டிசி பட போஸ்டர் வெளியீடு

18

லோகேஷ் பிறந்தநாள்: டிசி பட போஸ்டர் வெளியீடு
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 23 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு டிசி பட குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்த வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதேபோல் அல்லு அர்ஜுன் பட குழுவும் போஸ்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.