மட்டி 2 படத்துக்கு நான் ரெடி: டைரக்டர் பிரகபல்
பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி 23-ந்தேதி ரிலீஸ் ஆன படம் ஜாக்கி. மதுரை சுற்று வட்டார பகுதியில் நடைபெறும் கிடா சண்டையை மையமாக கொண்டு உருவான இந்தபடம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்திலும் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து இயக்குனர் பிரகபல் கூறியது, ‘ஜாக்கி படம் அமேசானில் டிரெண்டிங்காக உள்ளது. டாப் 10 பட்டியலில் முன்னேறி வருகிறது. இதை குறிப்பாக இந்தியில் நிறைய பேர் பார்த்து விட்டு பாராட்டி வருகிறார்கள்.காரணம் வட இந்தியாவிலும் கிடா சண்டை பிரபல விளையாட்டாக இருக்கிறது. அடுத்ததாக ‘மட்டி’ படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் 2 ஹீரோக்களும் புதிய படங்களுக்கு கதை கேட்டு வருகிறார்கள்.அவர்களது தேதி கிடைத்தால் ‘மட்டி-2’ எடுப்பேன். இல்லையென்றால் ஆக்சன் படம் ஒன்றை வேறு ஒரு முன்னணி ஹீரோவை வைத்து இயக்க உள்ளேன். அதே போல் ‘ஜாக்கி-2’ படமும் வரும் என்றார்.