Take a fresh look at your lifestyle.

மீண்டும் இணைந்த லெஜெண்டுகள்

2

மீண்டும் இணைந்த லெஜெண்டுகள்
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மறுபடியும் ஒரு நினைவு கூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் மற்றும் இசையமைப் பாளர் இளையராஜ இருவரும் 32 ஆண்டுக ளுக்குப் பிறகு மீண்டும் “லெனின் பாண்டியன்” படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். இதை ஒரு சிறு வீடியோ மூலம் படக்குழுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில், கிராமத்து மக்களின் வாழ்வியல் மற்றும் சமூக உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.