கார் மேனி -செல்வம் விமர்சனம்
கார் ஓட்டுநராக வேலை செய்யும் சமுத்திரக்கனி, அளவான குடும்பம், வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை, என்று மகிழ்ச்சியாக இருந்தாலும், சொந்த வீடு மற்றும் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்றும் முயற்சியில் கடனாளியாகி விடுகிறார். அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இருப்பதை வைத்து நிறைவாக வாழாமல், வேறு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருக்கும் வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது, என்ற மெசஜை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம் சக்ரி. சமுத்திரக்கனி, செல்வம் என்ற கேரக்டரில் எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக கடத்தியிருக்கிறார். சமுத்திரக்கனிக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் லக்ஷ்மி பிரியா. கெளதம் வாசுதேவ் மேனன், அபிநயா, சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர்.இசை மற்றும் யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு சிறப்பு.
Prev Post
Next Post