Take a fresh look at your lifestyle.

போலீஸ் தீம் பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்

2

போலீஸ் தீம் பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ்
டிரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும்
படம் ‘பரீட்’. இதை வெப் படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இயக்கியுள்ளார். இதில் நடிகர் வெற்றி ஒரு என்கவுண்டர் ஆபீஸர் கேரக்டரில் நடிக்கிறார். ஹீரோயின் ஆக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். மேலும் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி,சரவணன் சுப்பையா,ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜான் ராபின்ஸ்
இசையமைக்கும் இந்த படத்தில் இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜ் போலீஸ் தீம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து இயக்குநர் ஹாரூண் கூறியது,வேட்டையாடு விளையாடு படம் போன்று இருக்கும். இந்த படத்துக்கான தீம் பாடலை அருண்ராஜா காமராஜ் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்து அவைர பாட வைத்தோம். இந்தப் பாடலை ஜூனியர் நித்யா எழுதியுள்ளார்.