Take a fresh look at your lifestyle.

சிம்ரன் இது!! ஆளே மாறிட்டாரு…

2

சிம்ரன் இது!! ஆளே மாறிட்டாரு…
90-களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகக் கொடிகட்டிப் பறந்தவர் சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற வெற்றிப் படங்கள் மூலம், சிறந்த நடிப்பு, நடனம் மற்றும் வில்லன் பாத்திரங்களை ஏற்று 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர். திருமணத்திற்குப் பிறகு இடைவெளி விட்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கிய சீம ராஜா படத்தில் வில்லி கேரக்டரில் நடித்தார். அதன் பிறகு அபிஷன் ஜீவந்த் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி படத்தில் சசிகுமார் மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியதுடன் சிம்ரனுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. இதனால் தற்போது குணச்சித்திர மற்றும் முக்கிய வேடங்களில் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறது. இதற்காக அவரும் பழைய சிம்ரன் ஆக ஸ்லிம் லுக்கில் போட்டோ சூட் செய்து அசத்தியுள்ளார்.