கென் இன்னும் பல உச்சம் தொடுவார்: சுராஜ் வெஞ்சாடு
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் ஹீரோவாக நடித்து இயக்கிய யூத் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்றது. அதோடு இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றி யைப் பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழு சார்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.இதில் சுராஜ் பேசியது, இந்த படம் எனக்கு ஒரு பெரிய அனுபவத் தை கொடுத்தது. அதற்காக இயக்குநர் கென்னுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, மிகத் தெளிவான இயக்குநர். அவருடைய தீவிரமும் அர்ப்பணிப்பும் தான் இந்த வெற்றியின் காரணம். இன்னும் பெரிய உயரங்களை அவர் அடைவார் என நம்புகிறேன் என்றார்.
Prev Post
Next Post