தீபாவளிக்கு ஜனநாயகன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படம் ஜனநாயகன். அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தில் இடம் பெற்ற தளபதி கச்சேரி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
Prev Post
Next Post