சமுத்திரகனியை பார்த்து பிரமிக்கும் அமீர்
சாம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘யோலோ’.இதில் புதுமுகம் தேவ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஹீரோயின் ஆக சுவாதி நாயர் நடிக்கிறார். மேலும் கோபி, பிரவீன், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், வி.ஜே.நிக்கி உள்பட பலர் நடித்துள்ளனர். மிஸ்டர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ள இந்த படம் வரும் 12-ந்தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குநர் அமீர் பேசியது, என்னிடம் உதவியாளர்களாக 30, 40 பேர்இருப்பார்கள்.அதில் வெளிய வந்தவர்கள் ரொம்ப குறைவு தான். அதேபோல் படம் பண்ணி ஜெயிக்கிறவங்களும் குறைவு தான். அவர்களில் சமுத்திரகனி மற்றும் சாம் இருவரும் தனி ரகம்.இவர்களை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக உள்ளது என்றார்.
Next Post