விஜய் பிறந்தநாளில் ஜனநாயகன் டீசர்
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்க, முக்கிய கேரக்டரில் நரேன், மமிதா பைஜூ, பிரியா மணி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடந்தது. இந்த நிலையில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து உள்ளது. இதனால் வரும் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Prev Post
Next Post