ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் கதையில் லிஜோ மோல் ஜோஸ்
ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தி ஒன் : வித்தின் யூ”. ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தை ஹரிஷ்னி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளை கொண்ட நான்கு மனிதர்கள், எதிர்பாராத சம்பவங்களின் மூலம் எவ்வாறு ஒரு அசாதாரணமான நிகழ்வுகளுக்குள் இழுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது.இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சரவணன், பாவல் நவகீதன் மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வினோத் ராஜா ஒளிப்பதிவாளர் செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
Next Post