பிளாஸ்ட் பட வாய்ப்பை இழந்தது ஏன்?: நடிகை சுவாசிகா
அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள படம் பிளாஸ்ட். இதில் கராத்தே மாஸ்டராக அர்ஜூன் நடிக்க, அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளில் மிரள வைத்திருந்தனர். இந்த நிலையில் பிளாஸ்ட் பட வாய்ப்பு கைநழுவியது குறித்து நடிகை சுவாசிகா அளித்த பேட்டியில் கூறியது, முதலில் பிளாஸ்ட் படத்தில் அபிராமி கேரக்டரில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது கருப்பு படத்தில் நடித்து கொண்டி ருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போய் விட்டது. பிளாஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகளில் தான் நான் நடிக்க விரும்பினேன். ஆனால் வந்த வாய்ப்பையும் ஏற்க முடியாததால் ஏமாற்றமடைந்தேன். வரும் காலத்தில் எப்படியாவது ஒரு ஆக்ஷன் படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன்.
Prev Post