டிரோல்களுக்கு நான் பதில்சொல்ல மாட்டேன் : ராஷ்மிகா ஆவேசம்
நடிகைகளை சோசியல் மீடியாவில் ‘டிரோல்’ செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இது குறித்து ராஷ்மிகா அளித்த பேட்டியில், என்னைப் பற்றி தவறான கருத்துக்கள் வரும் போது நண்பர்கள் என்னிடம் நீங்கள் ஏன் பதில் சொல்வதில்லை? என கேட்பார்கள்.டிரோல் செய்பவர்களுக்கு பதில் சொல்வதால் பயன் என்ன? பொய் சொல்ப வர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அவர்கள் விரும்புவதை மட்டுமே கேட்க தயாராக இருக்கிறார்கள். பொய்கள் பரப்புவதை பார்த்து இது உண்மை. இது உண்மையில்லை என நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். வதந்திகளை பரப்பு வோருக்கு பதிலளித்தால் அவர்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். நான் ஏன் அதை ஊக்குவிக்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு பொய்யான பிரசாரங்களை செய்கிறார்கள்.நான் பணம் சம்பாதிக்க நடிக்கிறேன். சினிமாவிற்கு வந்த போது நான் எப்படி இருந்தேனோ? அப்படியே தான் இன்றும் இருக்கிறேன் என்றார்.
Next Post