Take a fresh look at your lifestyle.

உதவி இயக்குனர் வழி எனக்கு தெரியும்: யோகி பாபு

88

உதவி இயக்குனர் வழி எனக்கு தெரியும்: யோகி பாபு
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள படம் ‘கெணத்த காேணாம்’. இதில் யோகி பாபு ஹீரோவா நடித்துள்ளார். படப்பிடிப்பு
முடிந்த நிலையில் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். படக்குழுவினர் முயற்சியால் வரும் 13-ந் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை ஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு பேசியது, சுரேஷ் சங்கையா ‘காக்காமுட்டை’ படத்தில் இருந்தே எனக்கு பழக்கம். ‘கிடாயின் கருணை’ படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக என்னை
தொடர்பு கொண்டார். சூழ்நிலை காரணமாக நடிக்க முடியவில்லை. அவரது இயக்கத்தில் இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.நல்ல இயக்குநரை மிஸ் பண்ணி விட்டோம். நான் நிறைய உதவி இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ள்ளேன். சுரேஷ் சங்கையாவின் உதவி இயக்குநர்கள் 5 பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். நானும் உதவி இயக்குநராக இருந்து வந்தவன் தான். அதனால் அந்த வலி எனக்கு தெரியும் என்றார்