பிளாக்கோல்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
தீரன் அருண்குமார் இயக்கத்தில், வெற்றி நடித்துள்ள படம் பிளாக்கோல்டு. இதில்
பிரியாலயா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் லிவிங்ஸ்டன், துளசி, அபிராமி, வெங்கடேஷ், அருள் டி.ஷங்கர்,ராமர் ஆகியோர் நடித்துள்ளனர்.ஆக்சன் திரில்லர், ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பு பெற்றது. ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தனக்கு ஏற்பட்ட ஒரு இழப்பிற்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இதன் கதைக்கரு.
நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பின்னணியில் உள்ள நிழல் உலக மாபியாக்கள் பற்றி இப்படம் பரபரப்பாக பேசுகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.
Prev Post
Next Post