Take a fresh look at your lifestyle.

சமூக நீதியை திமுக புதைத்து விட்டது: அன்புமணி காட்டம்

84

சமூக நீதியை திமுக புதைத்து விட்டது: அன்புமணி காட்டம்

மதுரை என்டிஏ பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டாமாக பேசினார்.

“நாட்டில் 2,633 சமூகங்களில் 1,977 சமூகங்கள் வெறும் 2.5% இடஒதுக்கீட்டை மட்டுமே பெறுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால், சமூக நீதி குறித்துப் பேசும் திமுக அதனை புதைத்துவிட்டது.

சமூகநீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.”