Take a fresh look at your lifestyle.

‘ பறந்து போ’ விழாவுக்கு பறந்து வந்த இயக்குனர்கள்

56

‘ பறந்து போ’ விழாவுக்கு பறந்து வந்த இயக்குனர்கள்
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’.இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 4-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இதன் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன், பாலா, வெற்றிமாறன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் திரண்டு வந்து படக்குழுவை வாழ்த்து பேசினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு சூரியகாந்தி பூ கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர். அப்பா மகன் பாசத்தை பற்றி பேசும் படமாக இதை இயக்குனர் ராம் உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றியும், இயக்குனர் ராமை பற்றியும் அனைவரும் பாராட்டி பேசினர்.