Take a fresh look at your lifestyle.

முதல்முறையாக காமெடி கதையில் அர்ஜூன் தாஸ்

50

முதல்முறையாக காமெடி கதையில் அர்ஜூன் தாஸ்
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை தொடர்ந்து இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கி உள்ள படம் ‘பாம்’. காமெடி கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக அர்ஜூன் தாஸ் நடிக்க, ஹீரோயினாக ஸ்வாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.மேலும் காளிவெங்கட்,நாசர், அபிராமி, சிங்கம்புலி,பூவையார் ஆகியோர் நடித்து உள்ளனர்.படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.படம் பற்றி இயக்குனர் கூறியது,இந்த படம் ஃபேண்டஸி கலந்த காமெடி கதை.ஒரு ஊரில் இருக்கும் பிரச்சினையை 2 நண்பர்கள் எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பதுதான் மையக்கரு. சீரியசான பிரச்சனையில் காமெடியாக ‘பாம்’ போட்டால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லி உள்ளேன் என்றார்.