Take a fresh look at your lifestyle.

லீடர் படத்தை பார்த்து பாராட்டிய தனுஷ், வெற்றிமாறன்

1

லீடர் படத்தை பார்த்து பாராட்டிய தனுஷ், வெற்றிமாறன் (அ)
ஜெயிலர்,லியோ,விக்ரம் ஸ்டைலில் லீடர் படம் இருக்குமாம்!: லெஜண்ட் சரவணன்
துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் லீடர்.இதில் பாயல் ராஜ்புத் ஹீரோயினாக நடிக்க, ஷியாம்,லால், ஆண்ட்ரியா,நிஷா, சந்தோஷ், ஐஸ்வர்யா,மரியம் ஜார்ஜ், வி.டி. வி. கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 3-ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.இந்த விழாவில் லெஜண்ட் சரவணன் பேசியது, இந்தப் படத்தை தனுஷ் வெற்றி மாறன் ஆகியோர் பார்த்துவிட்டு படம் பிரமாதமாக இருப்பதாக பாராட்டினார்கள். ஜெயிலர்,லியோ,விக்ரம் போன்ற படங்களை போல் லீடர் படமும் இருக்கும் ஏனென்றால் அதற்குரிய தகுதி அனைத்தும் இந்த படத்திற்கு இருக்கிறது. இந்த ஆண்டில் பெரிய பிளாக் பஸ்டர் படமாக லீடர் அமையும் என்றார்.