Take a fresh look at your lifestyle.

அரசியல் அனல் பறக்கும் “டிஎன் 2026”படம் ஏப்ரல் 10ல் ரிலீஸ்

2

அரசியல் அனல் பறக்கும் “டிஎன் 2026”படம் ஏப்ரல் 10ல் ரிலீஸ்
கே ஆர் ஜி கண்ணன் ரவி குரூப்ஸ் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில் உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நடிப்பில்,பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “டிஎன் 2026”படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. தம்பி ராமையா கதை எழுதியுள்ள இதில் சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்க,
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது தமிழகத்தில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் இந்த டிஎன் 2026 படம் வெளியாக உள்ளது.