Take a fresh look at your lifestyle.

*டியர் ரதி -விமர்சனம்*

170

*டியர் ரதி -விமர்சனம்*
கூச்ச சுபாவம் கொண்ட சரவண விக்ரம், அதை சரி செய்வதற்காக பாலியல் தொழிலாளி யான ஹஸ்லி அமானை டேட்டிங் அழைத்து செல்கிறார். இந்நிலையில் வேறு ஒரு சம்பவத்திற்காக
ஹஸ்லி அமானை, தாதாவான ராஜேஷ் பாலசந்திரன் தேடி அலைய, இன்னொரு புறம் போலீஸ் அதிகாரியும் துரத்துகிறார்.இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி அவர் தப்பித்தார் என்பதே படத்தின் மீதி கதை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சரவண விக்ரம் இதில்ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படமே பாலியல் தொழிலாளியுடன் டேட்டிங் செல்லும் கேரக்டரில் நடித்துள்ளார். அதிலும் லிப் டு லிப் சீன் வேற.பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்துள்ள ஹஸ்லி அமான் மிகச் சரியாக அதை செய்துள்ளார். வில்லனாக நடித்துள்ள ராஜேஷ் பாலசந்திரன் மற்றும் பசுபதி ராஜ் நடிப்பு கதைக்கு பலம். ஜோன்ஸ் ரூபர்டின் இசை,லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. இந்த கால இளைஞர்கள் மனதில் இருக்கும் விஷயத்தை, பாலியல் தொழிலாளியின் வாழ்வியலோடு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் பிரவீன் கே.மணி. இருப்பினும் கதைக்க சம்பந்தமில்லாத சில காட்சிகளும், வசனங்களும் பலகீனம்.