Take a fresh look at your lifestyle.

அண்ணன் தம்பி பொங்கல் இது: சிவகார்த்திகேயன் பரபரப்பு பேச்சு

170

 

அண்ணன் தம்பி பொங்கல் இது: சிவகார்த்திகேயன் பரபரப்பு பேச்சு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் ஜன நாயகன் படம் வரும் 9ம் தேதி வெளியா கவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே 10ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜனநாயகம் டிரெய்லர் மற்றும் பராசக்தி இசை வெளியீடு என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ஜனநாயகன் வெளியீடு குறித்து விஜய்யின் மேலாளரிடம் கேட்டேன். அவரும் பராசக்தி மற்றும் ஜன நாயகன் ஒன்றாக வருவதில் பிரச்னை இல்லை என்றார். அதோடு பராசக்தி படத்துக்கு விஜய்யும் வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தான் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானோம்.33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். ஜனவரி 9-ல் ஜனநாயகனை கொண்டாடுங்கள்.10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்த பொங்கல், அண்ணன் தம்பி பொங்கல்” என்றார்.