Take a fresh look at your lifestyle.

சோகத்தில் இருக்கும் சாய் பல்லவி

158

சோகத்தில் இருக்கும் சாய் பல்லவி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்​டுமின்றி இந்​தி​யிலும் நடித்து வரு​கிறார் சாய்​பல்​ல​வி. பாலிவுட்ல ரன்​பீர் கபூருடன் ‘ரா​மாயணம்’ படத்​தில் சீதை​யாக நடித்​துள்ள அவர், நடிகர் ஆமிர்​கானின் மகன் ஜுனைத் கான் ஜோடி​யாக ‘மேரே ரஹோ’ என்ற படத்​தில் நடித்து முடித்​துள்​ளார். இது தாய்​லாந்​தில் உரு​வான ‘ஒன் டே’ என்ற படத்​தின் ரீமேக் ஆகும்.சுனில் பாண்டே இயக்​கி​யுள்ள இந்த ரொமான்​டிக் படத்​தின் முக்​கிய​மான காட்​சிகள், ஜப்பானின் சப்​போ​ரா​வில் நடக்​கும் பனி திரு​விழா​வில் படமாக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் படம் கடந்த நவம்பர் 7-ம் தேதி வெளி​யாக இருந்தது. பின்​னர் டிசம்பர் 12-ல் வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டது. இப்​போது ஜூலை மாதத்​துக்கு ரிலீஸை தள்ளிவைத்​துள்​ளனர். இதனால் சாய் பல்லவி மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம்.