ஹீரோவான பிக் பாஸ் புகழ் விக்ரமன்
கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் சார்பில் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Prev Post
Next Post