Take a fresh look at your lifestyle.

இன்று (29.7.2025) உலக புலிகள் தினம்…

146

இன்று (29.7.2025) உலக புலிகள் தினம்…
—————————
இந்திய நாட்டில் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் வனப்பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…
வனதுறை களப்பணியாளர்களின் சீரிய வன பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியாக மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புனர்வே இதற்கு முக்கிய காரணங்கள்…

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2022 மதிப்பீட்டின்படி, நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி,
2006 இல் 1411 ஆகவும்,
2010 இல் 1706 ஆகவும்,
2014 இல் 2226 ஆகவும், 2018 இல் 2967 ஆகவும் இருந்த புலிகள் எண்ணிக்கை 2022 இல் 3682 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 6% என்ற வீதத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு 76 புலிகளும், 2010-ல் 163,
2014-ல் 229,
2018-ல் 264,
2022-ல் 306 ஆக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 563 மற்றும் கேரளாவில் 213 எண்ணிக்கையில் புலிகள் இருக்கின்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் 1087 எண்ணிக்கையில் புலிகள் இருக்கின்றது.

எனவே புலிகள் பாதுகாப்பில் அனைவரும் கவனம் கொள்ளுதல் அவசியம்…

புலி இழந்திடேல்…
நாட்டின் நீர் வளம் புலிகளை பாதுகாத்தால் மட்டுமே…
—————————-
து.வெங்கடேஷ்,
தலைமை வனப்பாதுகாவலர்,
ஆனைமலை புலிகள் காப்பகம்,
கோயம்புத்தூர்.