ஸ்டன்ட் கலைஞர் குடும்பத்துக்கு உதவிய நடிகர்
பா.ரஞ்சித் இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேதாரண்ய பகுதியில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் அந்தப் படத்தில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது அதில் வேகமாக கார் ஓட்டி வந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவரது மகன் மனோஜின் படிப்பு செலவிற்கு ரூ 25 ஆயிரம் ரொக்க பணத்தை, நடிகர் தக்ஷன் விஜய் அவரது இல்லத்துக்கு சென்று நேரில் வழங்கிவிட்டு, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Prev Post
Next Post