கல்கி-2 படத்தில் இருந்து தீபிகா நீக்கமா?
பாலிவுட் இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கமிட் ஆகி இருந்தார். சம்பள பிரச்சினை
காரணமாக திடீரென அவர் விலகினார். இந்த நிலையில் பிரபாஸுடன் அவர் நடித்த ‘கல்கி 2898ஏடி’ படத்தின் 2-ம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது. ஸ்பிரிட் பட விவகாரத்தால் அவர் கல்கி படத்தில் இருந்து நீக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு தரப்பு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.அதோடு அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் தீபிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Prev Post
Next Post




