ஆளே மாறிய மஞ்சிமா மோகன்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன் பல மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் சேர்ந்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்தார். தமிழில் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் உடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு எடை கூடியிருந்த மஞ்சிமா மோகன் தற்போது 10 கிலோ அளவுக்கு தனது எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
Prev Post
Next Post





