Take a fresh look at your lifestyle.

லிஃப்ட் கேட்டு ஏறிய பெண்.. பேச்சில் தொடங்கிய பழக்கம்.. பாலியல் வன்கொடுமையில் முடிந்த சோகம்!

2

லிஃப்ட் கேட்டு ஏறிய பெண்.. பேச்சில் தொடங்கிய பழக்கம்.. பாலியல் வன்கொடுமையில் முடிந்த சோகம்!

புதுச்சேரியில் 50 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீரை வியாபாரம் செய்து வரும் அந்தப் பெண், நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்குச் செல்வதற்காக கருவடிக்குப்பம் பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தான் அதே பகுதிக்குச் செல்வதாகவும், தன்னை தனது தாயைப் போல பார்ப்பதாகவும் கூறி அந்தப் பெண்ணுக்கு லிஃப்ட் வழங்கியதாக தெரிகிறது.

அவரது பேச்சை நம்பி இருசக்கர வாகனத்தில் ஏறிய பெண்ணை, மார்க்கெட்டுக்குச் செல்லாமல் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று, பாழடைந்த கட்டடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.