Take a fresh look at your lifestyle.

புதிய லுக்கில் மஞ்சிமா மோகன்!

28

புதிய லுக்கில் மஞ்சிமா மோகன்!
‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எஃப்ஐஆர்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கடந்த ஆண்டு நடிகர் கௌதம் ராம் கார்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுப்பதற்காக, அவர் தன்னை முற்றிலும் புதிய லூக்கிற்கு மாற்றியுள்ளார். தன்னுடைய உடல் எடையை கணிசமாகக் குறைத்து, மிகவும் பொலிவாகவும், ஃபிட்டா கவும் மாறியுள்ள மஞ்சிமாவின் நியூ லுக் போட்டோஷூட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன. இந்த புதிய கெட்டப், அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் உயர்த்தியுள்ளது.