Take a fresh look at your lifestyle.

வசூலில் அரை சதம் அடித்த டிசி படம்

40

வசூலில் அரை சதம் அடித்த டிசி படம்
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான படம் ‘டிசி’. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது .முதல் 4 நாள்களில் இப்படம் ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளது. படத்தின் நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தியேட்டர்களில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் டிசி படம் 6 நாட்களில் ரூ 50 கோடி வசூலைக் குவித்துள்ளது.