Take a fresh look at your lifestyle.

கோகினூர் படம் வைரம் பற்றிய கதையா?

43

கோகினூர் படம் வைரம் பற்றிய கதையா?
எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் கோகினூர்.இதில் ஜீவா,நவீன், பாவனா சந்திரா,ஹிமா,தனு பிரசாத் ,ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன், ரவி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ராஜா சிவசங்கர் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ் திவாகர் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரிலும் அங்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் 45 நாட்களில் ஒரேக்கட்டப் நடைபெற்று முடிவடைந்தது. இறுதிகட்ட பணிகளான படத்தொகுப்பு மற்றும் பின்னணி இசைக்கோர்ப்பும் நடைபெற்று வருகிறது.படத்தில் ஐந்து பாடல்களுடன் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. வைரங்களின் ராணியாக திகழும், கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதையே கோகினூர் படத்தின் கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார்.