மல்லுட்டில் என்ட்ரியாகும் ருக்மணி வசந்த்
விஜய்சேதுபதி நடித்த “ஏஸ்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ருக்மணி வசந்த். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த “மதராஸி” படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் மலையாள சினிமாவில் கால் பதிக்கிறார். நிவின் பாலியின் 51வது படத்தில் இணைந்துள்ளார். “சார்லி, நையாட்டு” உள்ளிட்ட படங்களை தயாரித்த மார்ட்டின் பிரக்கத் இப்படத்தை தயாரிக்கிறார். “ஜய ஜய ஜய ஜய ஹே” படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான நாஷித் இப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்து ருக்மணி வசந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “நான் பல நாட்களாக தூரத்திலிருந்து ரசித்த ஒரு திரையுலகில் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார்.
Next Post
