ராம் பொதினேனி இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி எஸ்
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான ராம் பொதினேனி இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.தனது 23வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். இப்படத்திற்க்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு சினிமாவில் அதிக படங்களுக்கு இசையமைத்து டோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக மாறிவரும் சாம் சி எஸ், நடிகர் ராம் பொதினேனி உடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் கமிட் ஆகியுள்ளார்.
