Take a fresh look at your lifestyle.

ருக்மணி வசந்த்தின் ஃபேவரிட்

8

ருக்மணி வசந்த்தின் ஃபேவரிட்
நடிகை ருக்மணி வசந்த் நடித்த காந்தாரா 2 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து யஷ் உடன் டாக்ஸிக் படத்தில் 4 ஹீரோயின் களில் ஒருவராக நடித்துள்ளார். தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் டிராகன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்தாலும், தனது தனிப்பட்ட சந்தோஷங்களுக்காக ருக்மிணி நேரம் ஒதுக்க தவறுவதில்லை. இன்ஸ்டாகிராமில் தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.அதில், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட மின் ஜின் லீ எழுதிய பச்சிங்கோ என்ற வரலாற்று நாவலை தான் தற்போது படித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் சாப்பாட்டை பொறுத்தவரை, இட்லி, பாஸ்தா, ரொட்டி ஆகியவை என் பேவரிட். செர்ரி, பெர்ரி, கிவி மற்றும் டிராகன் புரூட் போன்ற பழங்களுடன் ஐஸ்கிரீம்கள் மற்றும் பிளாக் காபியையும் ரசித்து சாப்பிடுவேன் எனக் கூறியுள்ளார். இவ்வளவு சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கிய த்திற்காக ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.