Take a fresh look at your lifestyle.

‘டாக்ஸிக்‘படத்தின் ‘தபாஹி’மியூசிக் வீடியோ

8

‘டாக்ஸிக்‘படத்தின் ‘தபாஹி’மியூசிக் வீடியோ
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தை மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இந்த படம் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.இந்த நிலையில் படத்தின் ‘தபாஹி’ என்ற பாடலின் மியூசிக் வீடியோவை ஜீ மியூசிக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.