Take a fresh look at your lifestyle.

முகேன் ராவ்,பிரீத்தி அஸ்ரானி நடிக்கும் நிறம்

6

முகேன் ராவ்,பிரீத்தி அஸ்ரானி நடிக்கும் நிறம்
கே ஸ்குயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்து மாதவி தயாரிப்பில் பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நிறம்’. இதில் பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, தற்போது அதிக படங்கள் நடித்து வரும் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘அயோத்தி’, ’29’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் இதில் தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வானி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், படம் பற்றி இயக்குனர் பலராம் கிருஷ்ணா கூறியது, “பச்சோந்தி போல மனிதர்களின் குணங்களும் அடிக்கடி நிறம் மாறுவது உண்டு. அப்படி நிறம் மாறும் பண்பை அடிப்படையாக கொண்டுதான் இக்கதை உருவாகி இருக்கிறது.இது ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லர் கதை.இதை 2 ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்தோம். ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தில் நடக்கும் சில சம்பவங்கள் அதை உண்மை யாக்கி காட்டிவிட்டன என்றார்.