Take a fresh look at your lifestyle.

ஆணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய சினிமா: தமன்னா வேதனை

5

ஆணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய சினிமா: தமன்னா வேதனை
தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகையாக வலம் வரும் தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, தென்னிந்திய திரை உலகில் பெண்கள் மீதான அணுகுமுறை பெரும்பாலும் இனிமையானதாக இருப்பதில்லை.பாலிவுட்டில் நடிகைகளுக்கு தங்களது பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்த போது மக்கள் ஏன் அதை வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆணாதிக்க இயல்பு அல்லது பெண்களை அவர்கள் மதிக்கப்பட வேண்டிய விதத்தில் மதிக்காத ஒரு மனப்போக்கு உள்ளது.15 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் சினிமா வாழ்க்கையை தக்க வைத்துக்கொண்ட நடிகைகள் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் சரி வணிக ரீதியான நடனங்களிலும் சரி சமமாக சிறப்பாக செயல்படுவார்கள்.தென்னிந்திய திரைப்படங்கள் அதிக கட்டுப்பாடுகளை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.