Take a fresh look at your lifestyle.

காஜல் அகர்​வால் படத்துக்கு திடீர் சிக்கல்

4

காஜல் அகர்​வால் படத்துக்கு திடீர் சிக்கல்
காஜல் அகர்​வால், ஷ்ரே​யாஸ் தல்​படே நடித்​துள்ள படம், ‘தி இந்​தியா ஸ்டோரி’. சேட்​டன் டிகே இயக்​கி​யுள்​ள இப்படத்தை சாகர் பி ஷிண்டே எழு​தித்தயாரித்​துள்​ளார்.இந்​தி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படம், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளி​யாகிறது. இதன் டீஸர் மற்​றும் விளம்பரங்களில் விவ​சா​யம், பால் உற்​பத்தி குறித்து ஆதா​ரமற்ற, தவறான தகவல்​கள் இடம் ​பெற்​றுள்​ள​தாகக் கூறி பவேஷ் சோதா என்ற தொழில​திபர் சார்​பில் படக்​குழு​வுக்கு வழக்​கறிஞர் ஹிரண்யா பாண்டே நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.பூச்​சிக்​கொல்லி பயன்​பாடு, பால் கலப்​படம், கோழி வளர்ப்பு மற்றும் புற்​று​நோய் அதி​கரிப்பு தொடர்​பாக முன்​வைக்​கப்​பட்​டுள்ள தகவல்​களுக்கு போது​மான அறி​வியல் ஆதா​ரங்​கள் இல்லை என்றும் இது​போன்ற காட்​சிகள் விவ​சா​யிகள் மற்​றும் உணவு உற்பத்​தித் துறை​யின் நற்​பெயருக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் என்றும் அந்த நோட்​டீஸில் தெரிவி க்​கப்​பட்​டுள்​ளது.