பாலன்- விமர்சனம்
தன் 6 வயது மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் பர்ஸானா, அடையாளத்தை மறைத்து தான் யார் என்ற உண்மையை மறைத்து வேலை செய்து வருகிறார். எல்லா இடத்திலும் பிரச்சினைகள் அவரை துரத்த, கடைசியில் வயதான ஒரு மூதாட்டியை கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்க, அந்த வீட்டிலேயே தங்கி, தனது மகனையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். அந்த வீட்டிலும் அவருக்கு பிரச்சனைகள் வெடிக்க, அதன் பிறகு என்ன நடந்தது? உண்மையில் அவர் யார்? என்பதே படத்தின் மீதி கதை.மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், இந்த படத்தையும் யாருமே யோ சிக்க முடியாத அளவில் இயக்கியுள்ளார். ஆவேசம்’ படத்தின் இயக்குனர் ஜீத்து மாதவன் எழுதிய கதைக்கு, தனது திறமையான திரைக்கதை மூலம் உயிர் கொடுத்துள்ளார். அழுத்தமான நடிப்பால் படம் முழுவதும் கவனிக்க வைக்கிறார் பர்ஸானா.மகனாக நடித்துள்ள ஆதிசேஷன் நடிப்பு முதிர்ச்சி. சினான், ஜீன்பால் லால், கிரிஷ் ஏ.டி. என நடித்த அத்தனை பேரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் ஷைஜூ காலித் ஒளிப்பதிவும், சுஷின் ஷியாம் இசையும் படத்துடன் நம்மை பயணிக்க வைக்கிறது.