தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் படம் “அட்டாக்கர்”
ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண் ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் தயாரிப்பில்,நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் மற்றும் இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதியினரின் மூத்த மகளான அவந்திகா நடிக்கும் படம் “அட்டாக்கர்”. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷணம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித்,தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் மற்றும் இந்திய வாலிபால் வீரர்களான ஜி.ஆர். வைஷ்ணவ், எல்.எம். மனோஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் திரைப்படமாக இது உருவாகிறது.
Prev Post
Next Post