Take a fresh look at your lifestyle.

தனுஷ் படத்தின் டைட்டில் “ஓம் ”

1

தனுஷ் படத்தின் டைட்டில் “ஓம் ”

‘அமரன்’படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவரின் 55 வது படமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியானது. படத்திற்கு ஓம் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை ஆர் டேக் ஸ்டுடியோஸ் மற்றும் வொண்டர் பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, மம்முட்டி ஆகியோர் நடித்துள்ளனர். செம்மரக்கடத்தில் பின்னணியில் இரண்டு பாகங்களாக உருவாகவும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி படம் வெளியாகிறது. இதில் டைட்டில் அறிமுக விழாவில் வொண்டர் பார் நிறுவன இணை தயாரிப்பாளர் ஷ்ரேயாஸ், ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிர்வாகிகள் ஷ்ரத்தா மற்றும் அஸ்மத் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.