ஹீரோவான ஷங்கர் மகன் அர்ஜித்
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ‘லவ்வர் பாய்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி றார். ஏற்கனவே அவரது மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக ஆன நிலையில் ஷங்கர் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசு சினிமாவுக்குள் நுழைந்துள்ளது.பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அசோக் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அர்ஜித் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், ’வித் லவ்’ மதன், தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்ஷய், விநியோகஸ்தர்கள் அழகர் மற்றும் சீனு, திங்க் மியூசிக் சந்தோஷ், ஹாட்ஸ்டார் பிரசன்னா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பட குழுவினரை வாழ்த்தினர்.