Take a fresh look at your lifestyle.

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் – செயலியைத் திறக்காமலே வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்!

4

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் – செயலியைத் திறக்காமலே வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம்!

உலகின் பிரபலமான மெசேஜிங் செயலியான WhatsApp, ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக புதிய ஹோம் ஸ்கிரீன் விட்ஜெட் வசதியை உருவாக்கி வருகிறது. இந்த புதிய அப்டேட்டின் மூலம், பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை முழுமையாகத் திறக்காமல், நேரடியாக ஹோம் ஸ்கிரீனிலிருந்தே வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்து அனுப்ப முடியும். 3×1 அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விட்ஜெட்டில் “Tap to Record” என்ற புதிய வசதி இடம்பெற உள்ளது. அதனைத் தட்டினால் உடனடியாக குரல் பதிவு தொடங்கும். பதிவு முடிந்த பிறகு, அந்த வாய்ஸ் மெசேஜை விருப்பமான தொடர்புகளுக்கு அனுப்பவோ அல்லது WhatsApp Status ஆக பகிரவோ முடியும். இந்த அம்சம், அடிக்கடி வாய்ஸ் மெசேஜ் பயன்படுத்தும் பயனர்களுக்கு வேகமான மற்றும் எளிதான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப், இந்த அப்டேட்டையும் விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கலாம்என தகவல் வெளியாகியுள்ளது.