மல்யுத்த வீரராக ராம் சரண் மாறியது எப்படி!
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ஐந்து மொழிகளில் கடந்த 4ம் தேதி வெளியான ‘பெத்தி’ படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. 5 நாட்களில் இப்படம் உலக அளவில் 315 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ராம் சரண் கதாபாத்திரத்தின் அசாதாரணமான நடிப்பாகும். ஒரு முரட்டுத்தனமான மல்யுத்த வீரராகவும், கிராமத்து நாயகனாகவும் தோன்றுவதற்காக அவர் உடலளவிலும், உணர்ச்சிப்பூர்வமாகவும் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டார். இந்த கேரக்டருக்காக ‘தங்கல்’ படத்தின் மல்யுத்தப் பயிற்சியாளரான ராகேஷ் உடியாரின் வழிகாட்டுதலில் ராம் சரண் நான்கு மாதங்களுக்கும் மேலாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டதுடன், கேரக்டருக்கு தேவையான உடலமைப்பு, உடல்மொழி மற்றும் இயல்புத்தன்மையைப் பெற பல மாதங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதன் விளைவாக, அவரது நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் அவரது திரைப் பயணத்தின் சிறந்த நடிப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்படுகிறது.
Next Post