Take a fresh look at your lifestyle.

5 மில்லியனை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்

1

5 மில்லியனை கடந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடல்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில்,ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ’சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், மிகக் குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு தமிழ் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.